/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துவங்கியது அக்னி நட்சத்திரம் புதுச்சேரி மக்கள் கடும் அவதி
/
துவங்கியது அக்னி நட்சத்திரம் புதுச்சேரி மக்கள் கடும் அவதி
துவங்கியது அக்னி நட்சத்திரம் புதுச்சேரி மக்கள் கடும் அவதி
துவங்கியது அக்னி நட்சத்திரம் புதுச்சேரி மக்கள் கடும் அவதி
ADDED : மே 05, 2024 03:42 AM
புதுச்சேரி, : அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கிய நிலையில், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
புதுச்சேரியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, காலை 11:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை, அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்லாமல், வீட்டிற்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
கடந்த, ஏப்ரல் 20 மற்றும் 29ம் தேதிகளில், அதிகபட்சமாக, 98.24 டிகிரி வெயில் பதிவானது.
கடந்த மே மாதம் 1ம் 100.4 டிகிரி பதிவான நிலையில், அடுத்த நாள் 2ம் தேதி சற்று குறைந்து 97.2 டிகிரியாக பதிவானது.
நேற்று முன்தினம் மீண்டும், 100 டிகிரி பதிவானது. இதன் மூலம் புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களில், இருமுறை வெயில் சதம் அடித்துள்ளது.
இதேபோல, காரைக்காலில் நேற்று முன்தினம் 101.12 டிகிரி பதிவானது. இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் துவங்கியது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியதால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையில், வரும், 7ம் தேதி வரை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னல், மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், அதிகபட்ச வெப்பநிலையாக, 110 டிகிரி வரை இருக்கக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் மழை பெய்தால் மட்டுமே, ஓரளவு வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.