/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருதலை கொள்ளியாக தவிக்கும் போலீஸ்
/
இருதலை கொள்ளியாக தவிக்கும் போலீஸ்
ADDED : மார் 09, 2025 04:59 AM
புதுச்சேரி மாநில மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில், அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவர், தனது உறவினர்கள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இந்த மணல் திருட்டை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
ஆத்திரமடைந்த மணல் திருட்டு கும்பல், வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், மணல் திருட்டு கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். ஆவேசமடைந்த அமைச்சரின் ஆதரவாளர், அமைச்சரிடம் தொகுதியில் உள்ள போலீசார் நமக்கு எதிராக செயல்படுவதாகவும், இதனால் தேர்தலில் நமக்கு ஓட்டு குறையும் என கொளுத்தி போட்டார். அதனை ஏற்ற அமைச்சரும், மணல் திருட்டு சம்பவத்தில் என் அனுமதியின்றி எந்த நடவடிக்கையும் கூடாது என போலீசாருக்கு, வாய்மொழி கட்டளையிட்டுள்ளார். இதனால், மேல் அதிகாரிகள் ஒருபுறம், அமைச்சர் மற்றொருபுறம் என மாறி, மாறி வரும் உத்தரவு காரணமாக யார் சொல்வதை செயல்படுத்துவது என புரியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.