/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி முதல்வர் பாராட்டு
/
சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி முதல்வர் பாராட்டு
சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி முதல்வர் பாராட்டு
சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி முதல்வர் பாராட்டு
ADDED : ஆக 17, 2024 02:55 AM

புதுச்சேரி: சுதந்திர தின விழாவில் சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி விருது வழங்கி பாராட்டினார்.
தேசிய மாணவர் படையான என்.சி.சி., சிறந்து செயல்படும் மாணவர்களுக்கு முதுநிலை மற்றும் இளநிலை பிரிவகளில் முதல்வரின் தங்க பதக்கம், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம், கல்வி செயலரின் வெண்கல பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி சிறந்த என்.சி.சி., மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
என்.சி.சி., மாணவர்களுக்கான முதுநிலை பிரிவில் முதல்வரின் தங்கப்பதக்கம் முதுநிலை தரைப்படை பிரிவு மாணவர் திவாகருக்கும், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம் முதுநிலை விமானப்படை பிரிவு மாணவி சக்திப்பிரியாவுக்கும், கல்வி செயலரின் வெண்கலப்பதக்கம் முதுநிலை விமானப்படை பிரிவு மாணவி சிவானி சங்கருக்கும் முதல்வர் ரங்கசாமி வழங்கி பாராட்டினார்.
என்.சி.சி., இளநிலை பிரிவில் முதல்வரின் தங்கப்பதக்கம் இளநிலை தரைப்படை பிரிவு மாணவி சாராவதிக்கும், கல்வி அமைச்சரின் வெள்ளி பதக்கம் இளநிலை விமானப்படை பிரிவு மாணவர் தருண்குமாருக்கும், கல்வி செயலரின் வெண்கலப்பதக்கம் இளநிலை விமானப்படை பிரிவு மாணவி கயலுக்கும் வழங்கப்பட்டது. இம்மாணவர்கள் என்.சி.சி.,யில் ஆற்றிய சேவைகள் நினைவு கூறப்பட்டு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.