/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து சென்ற வாலிபரை 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
/
ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து சென்ற வாலிபரை 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து சென்ற வாலிபரை 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
ஜீவானந்தபுரம் ஓடையில் அடித்து சென்ற வாலிபரை 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
ADDED : ஆக 11, 2024 05:08 AM

புதுச்சேரி : ஜீவானந்தபுரம் ஓடை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி நேற்று 2வது நாளாக நடந்தது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென கொட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு இறங்கும் ஜீவானந்தபுரம் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, ஓடை மீதுள்ள பாலத்தில் கடக்க முயன்ற ஜீவானந்தபுரம், அன்னை பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த அய்யப்பன், 38; என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். கோரிமேடு போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் 10:30 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக இரவு 11:30 மணிக்கு, கலெக்டர் குலோத்துங்கன் தேடும் பணியை ஆய்வு செய்தார். அதன்பின்பு நேற்று காலை 2வது நாளாக மீண்டும் தேடுதல் பணி துவங்கியது.
ஜீவானந்தபுரம், கொக்குபார்க், வினோபா நகர், வேலன் நகர், சாரம் வெங்கடேஸ்வரா நகர், ஜீவா நகர் மற்றும் உப்பனாறு பகுதியில் தேடுதல் பணி நடந்தது. தீயணைப்பு துறையினர் இரு குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
கொக்குபார்க் சிக்னல் பாலத்தின் கீழ் உள்ள மணலில் புதைந்து இருக்கலாம் என தகவல் கிடைத்தால், இட்டாச்சி இயந்திரம் மூலம் மணலை தோண்டி எடுத்து தேடினர். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உப்பனாறு வாய்க்கால் மற்றும் கொக்குபார்க் பகுதியில் தேடும் பணியை துாரிதப்படுத்த ஏற்பாடு செய்தார். நேற்று இரவு 9:00 மணி வரை தேடியும் அய்யப்பன் கிடைக்கவில்லை.