ADDED : செப் 02, 2024 10:01 PM
காரைக்கால் : காரைக்காலில் மகன்கள் இருவர் இடையோ ஏற்பட்ட தகராறில் சமதான செய்ய தாய் துாக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் கோட்டுச்சேரி கீழக்காசாகுடிமேடு சுனாமி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கலைவாணி, 46; கணவன் இறந்ததால் நான்கு மகன்களுடன் வசித்து வருந்தார். இவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரண்டாவது மகன் கமலேஷ் சரியாக வலைக்கு செல்லவில்லை என்று மூத்த மகன் சுதீந்தன் கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இதை அவரது தாய் கலைவாணி சமாதானம் செய்துள்ளார். இருந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த கலைவாணி வீட்டின் அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.