ADDED : ஜூலை 13, 2024 05:58 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருபுவனை, பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பலராமன் மகள் ஹரிணி, 18.
இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்தார். கடந்த 10ம் தேதி காலை வீட்டிலிருந்து வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
