/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பண்டைய புதுச்சேரி வாழ் தமிழர்கள் வாணிபத்தில் செழித்துள்ளனர்: கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
/
பண்டைய புதுச்சேரி வாழ் தமிழர்கள் வாணிபத்தில் செழித்துள்ளனர்: கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
பண்டைய புதுச்சேரி வாழ் தமிழர்கள் வாணிபத்தில் செழித்துள்ளனர்: கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
பண்டைய புதுச்சேரி வாழ் தமிழர்கள் வாணிபத்தில் செழித்துள்ளனர்: கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் பேச்சு
ADDED : மே 19, 2024 03:58 AM

புதுச்சேரி : அரிக்கமேட்டின் பெருமையை இளைய தலைமுறையினர் உலகறிய செய்ய வேண்டும் என கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் பேசினார்.
புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி அருங்காட்சியகத்தில் கல்வி, ஆராய்ச்சியில் அருங்காட்சியகம் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவை துவக்கி வைத்து, கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் பேசியதாவது:
புதுச்சேரி அரிக்கமேட்டில் கி.மு 200 முதல் கிபி 200 வரை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குக் கிரேக்க ரோமானியர்கள் வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பண்ட மாற்று முறை வணிகமும், ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் இங்குப் பெரிய அளவில் நடந்துள்ளன. பண்டைய புதுச்சேரி வாழ் தமிழர்கள் வாணிபத்தில் செழித்துள்ளனர்.
பல வண்ண மணிகள், படிக மணிகள், கோமேதக கல் எனப் பல அரியப் பொருட்களை அகழ்வாய்வில் கண்டெடுத்துள்ளனர். இங்கு வண்ணம் தயாரிக்கும் உரை கிணறு உள்ளதால் ரோமானியர் இங்குத் துணி நெய்தல், மண்பாண்டங்கள் செய்தல், பல வண்ண மணிகளைக் கோர்த்து வண்ணம் தீட்டி கலைப் பொருட்களை உருவாக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வளவு வரலாற்று சிறப்புகள் கொண்ட அரிக்கமேடு புதுச்சேரியில் உள்ளதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். இதன் பெருமையை இளைய தலைமுறையினர் உலகறிய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தாகூர் கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரவிச்சந்திரன், மனித நாகரித்தின் தோற்றம் குறித்து பேசினார். மத்திய சுற்றுலா அமைச்சக மேலாளர் காயத்ரி பான்டா மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பல்வேறு கல்லுாரி மாணவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அவர்களின் சந்தேகங்களுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர்.

