ADDED : ஜூலை 24, 2026 08:32 PM
புதுச்சேரி: காலாப்பட்டு எம்.ஓ.எச்.பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்ட புத்தாக்க பயிற்சி, மின் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு, மாணவர்களுக்கு சமுதாய நலப்பணித் திட்ட சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் தலைமை தாங்கினார். ஓவிய ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். தலைமையாசிரியர் பூங்குன்றன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி சமுதாய நலப்பணித் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சமுதாய நலப்பணித் திட்ட புத்தாக்க பயிற்சி வழங்கினார்.
கிளீன் டு கிரீன் அமைப்பின் உறுப்பினர் மனோவா மார்கஸ் மின் கழிவுகளின் பாதிப்புகள் குறித்து விளக்கினார். சமுதாய நலப்பணித்திட்டத்தில் பங்காற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
