பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டி வில்லியனுார் அணி தகுதி
பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதி போட்டி வில்லியனுார் அணி தகுதி
ADDED : ஜூலை 24, 2026 08:22 PM
புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் வில்லியனுார் மொஹித் கிங்ஸ் அணி 3வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஸ்ரீராம் கேபிடல் வழங்கும், பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன், சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று மதியம் 2:00 மணிக்கு நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த வில்லியனுார் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முகுல் ராகவ் , பானு ஆனந்த் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் சேர்த்த நிலையில், முகுல் ராகவ் 5 ரன்களில் அவுட்டானர்.
பின் பானு ஆனந்த், ஆகாஷ் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்தனர். பானு ஆனந்த் 29 ரன்களில் அவுட்டானர். கேப்டன் அமன் கான் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக விளையாடிய ஆகாஷ் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். வில்லியனுார் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
பின் களமிறங்கிய மாகே அணியினர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். அந்த அணி பவர்பிளே ஒவர்களில் 56 ரன்கள் எடுத்தது. பிறகு லோகேஷ் 41 ரன் எடுத்து அவுட்டானார். பின் கரண் கண்ணன், ரித்திக் சர்மா இணைந்து நிதானமாக விளையாடினர். ரித்திக் சர்மா 28 ரன்களில் அவுட்டானார். ராகவன் 1, ஸ்ரீகரண் 2, கேப்டன் ராகவ் கோயல் 13 ரன்களில் ரன் அவுட் ஆகினர். கரண் கண்ணன் 49 ரன்களில் அவுட்டாக, அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2 விக்கெட் எடுத்த வில்லியனுார் அணியின் அமன் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் வில்லியனுார் அணி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
