‘நீட்’ தேர்வு விவகாரத்தில் போராட்டம் இளைஞரணி அமைப்பாளர் அறிவிப்பு
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் போராட்டம் இளைஞரணி அமைப்பாளர் அறிவிப்பு
ADDED : ஜூலை 24, 2026 08:22 PM
புதுச்சேரி: மாநிலங்களுக்கு கல்வி உரிமையை வழங்க வேண்டும் என தி.மு.க., இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்லியில் ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடந்துள்ளது. இதனை தி.மு.க., இளைஞரணி வன்மையாக கண்டிக்கின்றது. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காயமடைந்த மாணவர்களுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையும் நிவாரணமும் வழங்க வேண்டும்.
கல்வி அமைச்சர் தர்மந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சுதந்திரமான உயர்நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்து, மாநிலங்களுக்குக் கல்வி உரிமையை வழங்க வேண்டும். மத்திய அரசு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தீர்வு காணாவிட்டால், தலைமையின் அனுமதி பெற்று புதுச்சேரி முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
