ADDED : ஆக 11, 2024 05:28 AM
அரியாங்குப்பம் : பாகூரை சேர்ந்தவர் சிவலிங்கம்; இறந்து விட்டார். இவரது மனைவி அம்சவேணி, 56; அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வேலை செய்து வந்தார். புதுச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
இரவு நேரமாகி விட்டதால், பாகூரில் உள்ள வீட்டுக்கு செல்லாமல், அவர், அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனை செய்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஏற்கனவே இவர் இதய நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று மருந்துகள் சாப்பிட்டு வந்தார்.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

