/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறு பகுதியில் கோவில் முகப்பு போல் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
/
திருநள்ளாறு பகுதியில் கோவில் முகப்பு போல் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
திருநள்ளாறு பகுதியில் கோவில் முகப்பு போல் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
திருநள்ளாறு பகுதியில் கோவில் முகப்பு போல் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஆக 26, 2024 05:02 AM

காரைக்கால்: திருநள்ளாறு பகுதியில் கோவில் முகப்புபோல் பிரமாண்ட ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காரைக்காலுக்கு ரயில் சேவை துவக்கப்பட்டது. காரைக்கால் திருநள்ளாறு பேரளம் இடையே உள்ள 22 கிலோ மீட்டர் துாரத்திற்கு கடந்த 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை துவங்கியது.
இந்த வழித்தடத்தில் அம்பகரத்துார் ,தேவமாபுரம், சுரக்குடி ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் இருந்தன. காரைக்கால் பேரளம் வழி தடத்தில் போதிய வருவாய் இல்லை என கூறி மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 1984ம் ஆண்டு முதல் ரயில் சேவையை நிறுத்தியது.
இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் காலவிரயம், கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசு பெருமுயற்சியில் காரைக்கால் திருநள்ளாறு வழியாக பேரளத்திற்கு புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி ரூ.121.80 கோடி மதிப்பில் கடந்த 2022ம் ஆண்டு துவங்கியது.
புதிய ரயில்வே திட்டப்பணிகள் கோவில்பத்து, திருநள்ளாறு, பத்தக்குடி, அம்பகரத்துார் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இதில் திருநள்ளாறு பகுதியில் பிரமாண்டமாக கோவில் முகப்பு போல் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று அடுக்கு ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

