ADDED : ஜூலை 30, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலிதீர்தாள்குப்பம், சுகுமார் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி மகன் ஸ்ரீராம், 19; டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 16 ம் தேதி காலை 10.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
