/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்ப உற்சவம்
/
சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : மே 23, 2024 05:38 AM

காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக சனீஸ்வரர் பகவான் அருள்பலித்து வருகிறார்.
இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 12ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு,தியாகராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல், பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா, தேரோட்டம், சனிபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று முன்தினம் வானவேடிக்கையுடன் தெப்ப உற்சவம் வெகுவிமர்சையாக நடந்தது. நேற்று செண்பகத்தியாகராஜ சுவாமி இடையனுக்கு காட்சிக் கொடுக்க எழுந்தருளல் மற்றும் விசாக தீர்த்தம் நடந்தது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாகி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

