/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இல்லை எம்.எல்.ஏ.,க்கள் சரமாரியாக கேள்வி

ADDED : ஆக 08, 2024 11:02 PM
புதுச்சேரி:அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால் நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என, எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது சுயேச்சை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் பேசுகையில், 'புதுச்சேரி அரசு மருத்துவமவையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வேலை செய்யவில்லை. இதனால் நோயாளிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிகிச்சை ஓரிடத்திலும், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க மற்றொரு இடத்திற்கும் செல்ல வேண்டியுள்ளது.
வைத்தியநாதன் (காங்.,): அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏக்களை மதிப்பதே இல்லை. தெரிந்தவர்களுக்கு நாம் சிபாரிசு செய்தால், சிபாரிசில் வந்தியா என, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க காலம் தாழ்த்துகின்றனர்.
பிரகாஷ்குமார்(சுயேச்சை): எம்.ஆர்.ஐ., எடுத்த பிற மருத்துவமனைக்கு போக சொல்கின்றனர். ஆம்புலன்ஸ்சில் கூட நோயாளிகளை அழைத்து செல்லுவதில்லை. அவர்களுடைய சொந்த வாகனத்தில் தான் போய் எடுத்து வர வேண்டியுள்ளது. இதில் அரசு தலையிட்டு அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிறுவ வேண்டும்.
சபாநாயகர் செல்வம்: அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றது. மூன்று மாதங்களுக்குள் பணிகள் முடியும்.