புதுச்சேரி : தேங்காய்திட்டு அய்யனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவில் 37ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு பூரணி பொற்கலை-அய்யனாரப்பன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையொட்டி, மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம், லாஜஹோமம், மகாதீபாரதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், பா.ஜ., மாநில செயலாளர் வெற்றிச்செல்வம் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பூவராகவன், நிர்வாகிகள் பட்டாபிராமன், பிரேம்குமார், சிவஞானம், வெள்ளையம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.