/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மஞ்சினி கூத்தையனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
/
மஞ்சினி கூத்தையனார் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : ஏப் 30, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெருங்களூர் பூரணி புஷ்கலா சமேத மஞ்சினி கூத்தையனார் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
காலை 7.00 மணிக்கு அய்யனாருக்கு சிறப்பு அபி ேஷகமும் 9.00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. மதியம் 12.00 மணிக்கு பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மாலை மாற்றுதல், கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம், லாஜஹோமம், மகாதீபாரதனை தொடர்ந்து, பூரணி புஷ்கலா மஞ்சினி கூத்தையனார் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

