/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 21, 2024 04:59 AM
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது.
இதையொட்டி, தினமும் காலை 10:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு 7:30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு 7:30 மணிக்கு தங்க கருட சேவை சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நேற்று காலை 10:30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 4:௦௦ மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. வரும் 23ம் தேதி காலை 7:30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

