/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் பொறியாளர் குழுவினர் ஆய்வு
/
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் பொறியாளர் குழுவினர் ஆய்வு
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் பொறியாளர் குழுவினர் ஆய்வு
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் பொறியாளர் குழுவினர் ஆய்வு
ADDED : மார் 27, 2024 07:14 AM

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா வரும் மே மாதம் 4ம் தேதி பந்தக்கால் நடும் விழாவும், அதனை தொடர்ந்து மே 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து நடைபெறும் விழாவில் மே 21ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
மூன்று தேர்களின் தற்போதைய உறுதி தன்மை குறித்து பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜ் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:
தற்போது பெரிய தேர் சற்று சாய்வான நிலையில் உள்ளது.
இதனால் தேர் நிலை குறித்து அனுபவம் மிக்க நிபுணர்கள் குழு மற்றும் கடந்தாண்டு போன்று திருச்சி பெல் நிறுவன நிபுணர் குழுவையும் வரவைத்து முழு ஆய்வு செய்து தேரின் உறுதி தன்மைகள் குறித்த அறிக்கை கொடுத்த பிறகே, இவ்வாண்டு தேர் ஓட்டுவதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.