/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
/
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 22, 2024 01:26 AM

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் மற்றும் முதல்வர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம் மோற்சவவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினசரி காலையில் சிறப்பு அபிேஷகமும், இரவு சுவாமி வீதி யுலாவும் நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி பரிவேட்டை, 18ம் தேதி அலங்கரிக்கப்பட்ட 6ம் நாயன்மார்கள் ரிஷபம், மயில், வெள்ளி யானை வாகனங்களில் வீதியுலாவும், 20ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று காலை 7:40 மணிக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணன்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகள் வழியாக சென்ற தேர் காலை 11:45 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித் துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இன்று 22ம் தேதி தெப்பல் உற்வம் நடக்கிறது.
அதனையொட்டி மாலை 5 மணிக்கு மேல் சிறப்பு அபிேஷகம், தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி தெப்பல் உற்சவம்நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி, சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் உற்சவ மரபினர் செய்து வருகின்றனர்.

