ADDED : ஜூன் 02, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருக்கனுாரில் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீஸ்காரர் திடீரென ஏனாமிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காவல்துறையில் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் திடீரென திருக்கனுாரில் இருந்து ஏனாம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.
