ADDED : ஜூன் 02, 2026 09:22 PM
புதுச்சேரி: சென்னை, ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 39. இவரது மனைவி, திருமணமான 2 ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.
இதனால், மனமுடைந்த டில்லி பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன் திருக்கனுார் வந்து, சாலையோர பேப்பர் குப்பைகளை பொறுக்கி, அதில் வரும் பணத்தை கொண்டு மது அருந்தி வந்தார்.
இந்நிலையில், டில்லிபாபு நேற்று முன்தினம் திருக்கனுார் சாராயக்கடை அருகே அதிக மதுபோதையில் இறந்து கிடப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, டில்லிபாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
