ADDED : ஜூன் 02, 2026 09:22 PM
: புதுச்சேரி: முதல்வர் தொகுதியில் படு மோசமான நிலையில் உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வி.வி.பி., நகர் சாலை கடந்த பல மாதங்களாக ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த ராஜிவ் சதுக்கம் சிக்னலில் வாகன நெரிசலை தவிர்க்க லாஸ்பேட்டை, இ.சி.ஆர், சாலை இருந்து வரும் பொதுமக்கள் வழுதாவூர் சாலையை பயன்படுத்த வி.வி.பி., நகர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மோசமான சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் பெரிய ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்வர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். முதல்வர் தலையிட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
