தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/   திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம்

  திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம்

  திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம்


ADDED : ஜூலை 20, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம் மற்றும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது. 

புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, திருக்குறளில் வேளாண்மையும் விருந்தோம்பலும் என்னும் தலைப்பில் பேசினார். மண்டல அமைப்பாளர் மாதவி வரவேற்றார். நிறுவனர் செல்வி முன்னிலை வகித்தார். மருந்தாளுநர் கல்லூரி மாணவி இசைமொழி  நோக்கவுரையாற்றினார்.  

மாணவிகள் பத்மஶ்ரீ,  ஹேமளா, சாதனா, சோபியா, ‘தமிழரின் விருந்தோம்பல் பண்பு’ குறித்துக் பேசினர்.

மாணவிகள் சுடர்தேவி,  ஸ்ரீநதி, பிரித்திகா, சாரதா,  ‘தற்கால விருந்தோம்பல்’ என்னும் தலைப்பில் கலந்துரையாடல் செய்தனர். மாணவர்கள் களப்பயணமாக நெல் வயல் சென்று வேளாண்மை காப்போம் விருந்தோம்பல் செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.  பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எழுதுபொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. மண்டல அமைப்பாளர் சரினா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us