காலவரையற்ற விடுமுறை எடுக்க கறிக்கோழி வியாபாரிகள் சங்கம் முடிவு
காலவரையற்ற விடுமுறை எடுக்க கறிக்கோழி வியாபாரிகள் சங்கம் முடிவு
ADDED : ஜூலை 20, 2026 08:22 PM
வில்லியனுார்: தமிழ்நாடு கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் புதிய முடிவுக்கு புதுச்சேரி கறிக்கோழி வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அனைத்து கறிக்கோழி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புதுச்சேரி கறிக்கோழி மொத்த வியாபாரி சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ், பொருளாளர் திருச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் திடீரென எடுத்துள்ள ஒருதலைப்பட்சமான முடிவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளனர். மேலும் கூட்டத்தில் தீர்மானங்களாக, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் எப்போதும் போல் தீவனக்கட்டுப்பாடு நடைமுறையை உடனே செயல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் தமிழ்நாடு கறிக்கோழி விற்பனையாளர்களுடன் சேர்ந்து காலவரையற்ற விடுமுறை எடுக்க கூட்டம் முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள தீவனகட்டுப்பாட்டு செயல்முறையை அமல்படுத்த கறிக்கோாழி உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
