/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாபிராமர் கோவிலில் நாளை திருமஞ்சனம்
/
பட்டாபிராமர் கோவிலில் நாளை திருமஞ்சனம்
ADDED : செப் 07, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில், நாளை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
புதுச்சேரி - கடலுார் சாலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை (8ம் தேதி) சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, லட்சுமி நரசிம்மர் மற்றும் சக்கரத்து ஆழ்வாருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்து மகா தீபாரதனை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சின்னசாமி உட்பட பலர் செய்து வருகின்றனர்.