ADDED : ஜூலை 13, 2026 10:44 PM
புதுச்சேரி: புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா நடந்தது.
புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில், திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அண்ணாவின் பார்வையில் திருவள்ளுவர் என்ற கவியரங்கம் நடந்தது. புதுச்சேரி தமிழ்சங்கத்தில், நடந்த விழாவிற்கு இயக்கத் தலைவர் கலைவரதன் தலைமை தாங்கினார்.
செயலாளர் கலைவாணிகணேசன் முன்னிலை வகித்தார். வைகாசியில் பிறந்த வள்ளுவர் என்ற தலைப்பில், கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள் பேசினார்.
பேராசிரியர் ரேவதி, சீனுவேணுகோபால், தமிழ்சங்க பொருளாளர் அருள்செல்வம், எஸ்.பி., பாஸ்கரன், விசயநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இயக்க காஞ்சிபுரம் கிளை தலைவர் அமுதா, கரூர் கிளைத் தலைவர் கனகலட்சுமி, கடலுார் கிளைத் தலைவர் புவனை சர்மிளா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அண்ணாவின் பார்வையில் திருவள்ளுவர் என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில், வெங்கடேசன் தலைமையில், கவிஞர்கள் வெற்றிவேலன், காஞ்சனா, அமுதா, கலைவாணி ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பச்சையம்மாள் பாண்டியன், ஈஸ்வரிதேவி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ரத்தின விநாயகம் நன்றி கூறினார்.
