UPDATED : ஜூலை 13, 2026 10:59 PM
ADDED : ஜூலை 13, 2026 10:34 PM
புகார் பெட்டி:
கொசு தொல்லையால் மக்கள் அவதி: புதுச்சேரி செந்தாமரை நகர், குரு சித்தானந்தா வீதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சீத்தாலட்சுமி, புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை: ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
குரு, புதுச்சேரி.
சாலையில் கழிவுநீர் தேக்கம்: சாரம் வெங்கடேஸ்வரா நகர் 6வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
பிரேமா, சாரம்.
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மோகன், புதுச்சேரி.-
சாலை படுமோசம்: மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கலியபெருமாள், மூலக்குளம்.
டவுன் பஸ் தேவை: ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
லதா, கோரிமேடு.
சாலை படு மோசம்: கரிக்கலாம்பாக்கம் தனிக்குப்பம் மாந்தோப்பு பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
செல்வன், கரிக்கலாம்பாக்கம்.
