நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: செட்டிப்பட்டு ஏழை மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஏழைமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 7ம் ஆண்டு சாகை வார்த்தல் உற்சவம் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.