ADDED : மே 20, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: முன்விரோதத்தில் டிரைவரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 39, டிரைவர். இவருக்கும் தமிழக பகுதியான பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் 37, என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அசோக்குமார் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் 34, ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 37 ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமார் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

