/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்விரோதத்தில் சிமென்ட் கட்டையால் தாக்கி ரவுடி கொலை மூன்று பேர் கைது
/
முன்விரோதத்தில் சிமென்ட் கட்டையால் தாக்கி ரவுடி கொலை மூன்று பேர் கைது
முன்விரோதத்தில் சிமென்ட் கட்டையால் தாக்கி ரவுடி கொலை மூன்று பேர் கைது
முன்விரோதத்தில் சிமென்ட் கட்டையால் தாக்கி ரவுடி கொலை மூன்று பேர் கைது
ADDED : ஏப் 24, 2024 08:40 AM

அரியாங்குப்பம், : அரியாங்குப்பம் சாராயக்கடையில் ரவுடியை சிமென்ட் கட்டையால், தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த புதுகுளம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (எ) அலெக்ஸ்; 33; இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் மீது, அரியாங்குப்பம், போலீசில் அடிதடி, கொலை முயற்சி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
மணவெளி, சுடலை வீதியை சேர்ந்த ரவுடி வெங்கடேசனின் பைக்கை ஆனந்த் எடுத்து சென்றது தொடர்பாக, கடந்த ஓராண்டுக்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், ஆனந்த் சாராயக்கடையில் சாராயம் குடித்துக்கொண்டிருந்தார். மது போதையில், ஆனந்த் நிதான மில்லாமல், இருந்ததால், ஏற்கனவே கோபத்தில் இருந்த வெங்கடேசன், பழிதீர்த்து கொள்ள சாராயக்கடையில் இருந்த சிமென்ட் கட்டையை எடுத்து, ஆனந்த் தலையில் பலமாக தாக்கினார்.
அதில், தலைமையில் பலத்த காயமடைந்த, ஆனந்த் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சாராயக்கடையில் குடிக்க வந்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலறிந்த, அரியாங்குப்பம், இன்ஸ்பெக்டர், கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் ஆனந்தின் உடலை கைப்பற்றி, கதிர்காமம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணவெளியைச் சேர்ந்த வெங்கடேசன்,34; அரியாங்குப்பம் பெரியார் நகரைச் சேர்ந்த இளையராஜா,40; செல்வக்குமார்,38; ஆகியோரை கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் வெங்கடேசன் பைக்கை ஆனந்த் எடுத்து சென்று திருப்பி தராததாலும், வெங்கடேசனுடைய நெருங்கிய நண்பான இளையராஜாவை, கடந்த 2021ல் கொலை செய்யப்பட்ட ஆனந்த் கத்தியால் குத்தினார். இந்த முன்விரோதம் காரணமாக ஆனந்தை கொலை செய்தது தெரியவந்தது.
ரவுடி வெங்கடேசன், பிரபல ரவுடியான மர்டன் மணிகண்டன் ஏனாம் சிறையில் இருக்கும் போது, கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில், தண்டனை பெற்று மேல்முறையீட்டில், சமீபத்தில், சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

