/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூவரிடம் ரூ. 1.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
மூவரிடம் ரூ. 1.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
மூவரிடம் ரூ. 1.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
மூவரிடம் ரூ. 1.30 லட்சம் 'அபேஸ்' சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : ஏப் 14, 2024 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பேரிடம் 1.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, ஜாய் ரிச்சர்ட். இவரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் பேசினார்.
அதில், உங்களின் கிரெடிட் கார்டு தொகையை உயர்த்த, கிரெடிட் கார்டு விபரங்களை கேட்டார்.
தொடர்ந்து, மொபைல் போனில் வந்த ஓ.டி.பி., எண்ணை அவர் கொடுத்தார்.
அடுத்த சில நிமிடத்தில், அவரின் வங்கி கணக்கில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த பாரதி என்பவரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர், கடன் தவணை கட்ட வில்லை.
அதனால் அவரது படத்தை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டினர். பயந்த போன அவர், 1.08 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.
அதே போல், கிரிஜா என்பவர் லோன் ஆப்பில், கடன் பெற்றுள்ளார். அவரிடம் பேசிய மர்ம நபர் ஒருவர், உங்களது புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். பயந்து போன அவர், 19 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
மூவரும் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

