ADDED : மார் 26, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பொதுமக்களிடம் தகராறு செய்த மூன்று வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்தவர்கள் தேவா, 25; சுமன், 21; ராஜசேகர், 21; ஆகிய மூவரும் நேற்று குடித்து விட்டு, தனியார் பள்ளி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் எச்சரித்து அனுப்பினார். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்ததால் மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தார்.

