/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம்
/
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம்
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம்
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம்
ADDED : ஏப் 29, 2024 04:44 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கஞ்சா விற்பனை, தொடர் குற்ற செயலில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரியில் ரவுடிகள் மோதல், வெடிகுண்டு வீசி கொலை சர்வ சாதாரணமாக நடக்கும். தமிழகத்தில் சொத்து தகராறு, கள்ள காதல் உள்ளிட்ட விவகாரங்களில் கொலை நடக்கும். ஆனால், புதுச்சேரியில் குவாட்டர் மதுபான பாட்டிலுக்கு கூட கொலைநடந்த சம்பவம் உள்ளது.ஒவ்வொரு ஏரியாவிலும் ரவுடியாக உருவாகும் நபர்களை போலீசார் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியது முக்கிய காரணம். தற்போது ஒவ்வொரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் வீதம், 150 ரவுடிகள் போலீஸ் பட்டியலில் உள்ளனர்.
அடிதடி, மாமூல் வசூல், கஞ்சா விற்பனையால்ரவுடிகளுக்குள் ஏற்படும் பகை காரணமாக கொலைகள் அரங்கேறுகிறது. கடந்த மார்ச் 4ம் தேதி 9 வயது சிறுமி கொலை செய்து சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்பு, தேர்தல் காரணமாக ரவுடிகள் அட்டகாசம் சற்று குறைந்து இருந்தது.
தேர்தல் முடிந்தவுடன், ரவுடிகள் தங்களின் வழக்கமான பணிக்கு திரும்பினர். இதனால் கடந்த 24ம் தேதி ஒரே நாளில் பெரியார் நகர் மற்றும் அரியாங்குப்பத்தில் இரு கொலைநடந்தது. இதை அறிந்த டி.ஜி.பி., எஸ்.பி.க்களை அழைத்து, ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன்படி, ஆப்ரேஷன் திரிசூல் மூலம் 150 ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடந்தது.ஆக்டிவாக உள்ள 31 ரவுடிகள் லிஸ்ட் தயாரிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனை, கொலை திட்டத்துடன் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் மற்றும் போதை பொருள் விற்பனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு அதற்கான பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

