/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழகர் சித்தர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
/
அழகர் சித்தர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : ஏப் 16, 2024 05:40 AM

நெட்டப்பாக்கம், : தென்னம்பாக்கம் அழகர் சித்தர் கோவிலில் அழகர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
ஏம்பலம் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பூரணி பொற்கலை உடனுறை அழகர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்தரை 1ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
இதையொட்டி அன்று காலை 7.00 மணிக்கு ஆற்றிலிருந்து கரகங்கள் புறப்பாடும், 10.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை 5.00 மணிக்கு ஆற்றிலிருந்து காவடிகள் புறப்பாடும், 6.00 மணிக்கு பொன்னியம்மன் கரகம் புறப்பாடு, 9.00 மணிக்கு அழகர் சித்தர் பீடத்தில் விசேஷ ஆராதனை தொடர்ந்து, 11.00 மணிக்கு தென்னம்பாக்கம் ஆற்றில் இருந்து அழகர் திருமணத்திற்கு புறப்புடுதல், மாலை 3.00 மணிக்கு வேடசாத்தான் கரகம் ஆலயத்திலிருந்து புறப்பாடு தொடர்ந்து, 5.00 மணிக்கு திருக்கல்யணாம் வைபவம் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.
இதில் ஏம்பலம், நல் லாத்துார், தென்னம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

