/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
ADDED : மே 23, 2024 05:41 AM

புதுச்சேரி : புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 11 அவதார நரசிம்ம பெருமாளுக்கும் திருமஞ்சன வழிபாடு நடந்தது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ண நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது.
இங்கு பெருமாள், மொத்தம், 11 அவதாரத்தில் நரசிம்மர்களாக, காட்சி தந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று நரசிம்ம ஜெயந்தியையொட்டி, அந்த கோவிலில், 11 அவதாரத்தில் உள்ள நரசிம்ம பெருமாளுக்கும் விசாக நட்சத்திரத்தில், காலை 10:00 மணிக்கு, திருமஞ்சனம் நடந்தது.
இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, 11 நரசிம்மர்களும், தேரில் எழுந்தருளி, வீதியுலா நடந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.