/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை தொழிலதிபர் பத்மாவதி ஆதாரவளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்
/
திருபுவனை தொழிலதிபர் பத்மாவதி ஆதாரவளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்
திருபுவனை தொழிலதிபர் பத்மாவதி ஆதாரவளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்
திருபுவனை தொழிலதிபர் பத்மாவதி ஆதாரவளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்
ADDED : ஏப் 07, 2024 05:41 AM

புதுச்சேரி,: திருபுவனை தொழிலதிபர் பத்மாவதி ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.,வில் இணைந்தார்.
புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதியை சேர்ந் தவர் பத்மாவதி. தொழிலதிபரான இவர், அந்த பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் நற்பணிகளையும் செய்து வருகிறார்.
பத்மாவதி பா.ஜ.,வில் இணையபோவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி ஏ.எப்.டி., திடலில் இருந்து எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்ட பத்மாவதி தலைமையிலான இளைஞர்கள் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை காமராஜர் சாலை, முத்தியால் பேட்டை, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரை சாலை, வழியாக தனியார் திருமண மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ.கள்., வி.பி.ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் சுமார் 1300க் கும் மேற்பட்ட இளைஞர்களுடன் பா.ஜ.வில் இணைந்தார். தொழிலதிபர் பத்மாவதிக்கு பா.ஜ., சார்பில் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கரன், திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், பிரமுகர்கள், தொகுதி நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

