ADDED : ஆக 10, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, இன்று (10ம் தேதி) பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (10ம் தேதி) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

