/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
ADDED : ஜூலை 17, 2024 06:11 AM
புதுச்சேரி : மொகரம் பண்டிகையொட்டி புதுச்சேரியில் பள்ளி கல்லுாரிகளுக்கு, இன்று 17ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது.
மொகரம் பண்டிகையொட்டி, இன்று 17ம் தேதி சில தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க காரைக்கால் நாஜிம் எம்.எல்.ஏ., அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், இன்று 17ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அரசு பள்ளிகளில் இன்று 17 ம் தேதி நடக்க இருந்த முதல் பருவ தேர்வுகள் வரும் 24ம் தேதி நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்தார்.
பள்ளிகளை தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கும், இன்று 17ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறையை ஈடுசெய்ய வரும் 27ம் தேதி சனிக்கிழமை கல்லுாரிகள் இயங்கும் என உயர்கல்வித்துறை சிறப்பு அதிகாரி மோகனசுந்தரி அறிவித்துள்ளார்.