நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : ராம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா இன்று நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்தலாம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த 13ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் முதல்கால யாக பூஜை, நேற்று காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது.
இன்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை 9:30 மணிக்கு முத்தலாம்மன் மூலவருக்கு கும்பாபிேஷக விழா, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

