/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
/
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று தாலி கட்டும் நிகழ்ச்சி
ADDED : ஏப் 23, 2024 03:54 AM
உளுந்துார்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, சாகை வார்த்தல், பந்தலடியில் தாலி கட்டுதல் (பாரதம் ஆரம்பம்), பீஷ்மர், தர்மர், பாஞ்சாலி பிறப்பு, பகாசூரன் வதம், பாஞ்சாலி திருமணம், ராஜசுய யாகம், விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று முன்தினம் காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடந்தது. இன்று 23ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 24ம் தேதி காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி விடையாத்தி, 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று இரவு 7:00 மணிக்கு ஆய்வு செய்த டி.ஐ.ஜி., திஷா மித்தல், விழாவிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். எஸ்.பி., சமய்சிங் மீனா உடனிருந்தார்.

