/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் பணி தாமதம் வியாபாரிகள் வாக்குவாதம்
/
வாய்க்கால் பணி தாமதம் வியாபாரிகள் வாக்குவாதம்
ADDED : பிப் 22, 2025 04:38 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதை தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்தது.
அதன் பிறகு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக ஜே.சி.பி., மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியால், தினசரி வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி வியாபாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
வாய்க்கால் அமைக்கும் பணியை உரிய கால இடைவெளி விட்டும், துரிதமாகவும் செய்து முடிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

