ADDED : ஆக 25, 2024 05:48 AM

புதுச்சேரி: விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில், போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை, பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போக்குவரத்து போலீஸ் சீனியர் எஸ்.பி., பிரவின் குமார் திருப்பதி, இன்ஸ்பெக்டர் கோகுலகிருஷ்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், போக்குவரத்து முறை சாலை பாதுகாப்பு நடைமுறைகள், சாலை விதிகள், ஒழுங்கு முறைகள் மற்றும் விபத்துகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.