/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 06, 2025 04:00 AM

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சார்பில், மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கதிர்காமம் அரசு பொது மருத்துவமனை கருத்தரங்கில் நடந்தது.
புதுச்சேரி காவல்துறை துணைத் தலைவர் அஜித்குமார் சிங்களா தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல்துறை கிழக்கு, வடக்கு எஸ்.பி., பிரவின்குமார் திரபாதி தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., சத்தியசுந்திரம், என்.சி.சி., பயிற்சி அதிகாரி ஐமன் சமந்தா, ராஷ்டிரியா ரக்ஷா பல்கலைக்கழகம் இயக்குனர் அர்ஷ் கணேசன், என்.சி.சி., அதிகாரி சதிஷ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.