/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
/
தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
ADDED : ஆக 21, 2024 11:49 PM
வில்லியனுார் : தொண்டமாநத்தம் கிராமத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்குவித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் தொண்டமாநத்தம் கிராமத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, பப்பாளி, எலுமிச்சை மற்றும் முருங்கை பயிர்கள் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தொண்டமாநத்தம் வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார். மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி தோட்டக்கலை துறை உதவி பேராசிரியர் இலக்கியா, நோயியல் துறை பேராசிரியர் ரத்தினசபாபதி ஆகியோர் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி மற்றும் அதனை தாக்கும் பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினர்.
பயிற்சியில் ராமநாதபுரம், தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம் மற்றும் சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டமாநத்தம் உழவர் உதவியக களப் பணியாளர்கள் லட்சுமணன், சாமிநாதசாமி, சுகுமார் மற்றும் செழியன் ஆகியோர் செய்தனர்.