ADDED : ஜூன் 11, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் வயல்களை காக்கும் இயக்கம், தற்சார்பு விவசாயம் நோக்கிய பயணம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இணை வேளாண் அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். இயற்கை விவசாயம் குறித்து விவசாயி ராதாகிருஷ்ணன், சவுக்கு சாகுபடி குறித்து விவசாயி செந்தில் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
வேளாண் அலுவலர் கலைசெல்வன் மண்வளம் மற்றும் மண்வள அட்டையின் பரிந்துரைகள் குறித்து எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர்கள் தங்கதுரை, பாலசுப்ரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
