/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயற்கை விவசாய தொழில்நுட்பம் பயிற்சி
/
இயற்கை விவசாய தொழில்நுட்பம் பயிற்சி
ADDED : ஆக 21, 2024 11:52 PM

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நிரந்தர வேளாண்மை மற்றும் இயற்கை விவசாய தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
சந்தை புதுக்குப்பத்தில் நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். துணை வேளாண் இயக்குனர் கலைச்செல்வி, ஆத்மா திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் சாந்தி, இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து பேசினார். பாகூர் வேளாண் அதிகாரி பரமநாதன், இயற்கை விவசாயி வெற்றி செல்வன் ஆகியோர் இயற்கை முறையில் பயிர் சாகுபடியின் தொழில்நுட்பம், இயற்கை உரம் தயாரித்தல், சிறுதானியத்தை மதிப்பு கூட்டுதல், பழவகை பொருட்களில் மதிப்பு கூடுதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர்கள் நாகராஜன், ஏழுமலை, ஆதிநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.
தொழில்நுட்ப மேலாளர் குமரன் நன்றி கூறினார். காட்டேரிக்குப்பம், கொடாத்துார், சுத்துக்கேணி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.