ADDED : ஜூன் 09, 2026 10:12 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சோரப்பட்டு பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் கத்தரி மற்றும் வெண்டைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் விநாயகம்பட்டு கிராமத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதலை தடுத்தல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குச் செயல் விளக்கம் அளித்தார்.
முகாமில் விநாயகம் பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், செயல் விளக்க உதவியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.
