/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடலுார் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
/
வடலுார் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
வடலுார் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
வடலுார் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
ADDED : ஜூலை 03, 2024 05:42 AM
வடலுார் : வடலுார் இன்ஸ்பெக்டர் ராஜா அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நெய்வேலி டவுன்ஷிப்பில் கடந்த 2015ல் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பட்டாம்பாக்கம் சுப்ரமணியன் ஸ்டேஷனிலேயே இறந்தார்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீஸ்காரர் சவுமியன் உள்ளிட்டோர் மீது 304 உள்ளிட்ட 5 பிரிவுகளில் கடலுார் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா, வடலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
இவர், வழக்கின் விசாரணை தடை செய்வார் என்பதால், வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டி சுப்ரமணியன் மனைவி ரேவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, இன்ஸ்பெக்டர் ராஜா இடமாற்றம் குறித்து 4 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜாவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டி.ஐ.ஜி., நேற்று உத்தரவிட்டுள்ளார்.