ADDED : செப் 13, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கவுண்டன்பாளையத்தில் புதிய மின்மாற்றி துவக்க விழா நேற்று நடந்தது.
கவுண்டன்பாளையம் மற்றும் காந்தி நகரில் நில விய குறைந்த மின் அழுத்தம் பிரச்னையை சரி செய்திட ரூ.17.57 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி துவக்க விழா நேற்று நடந்தது. அரசு கொறடா ஆறுமுகம், மின்மாற்றியை இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் பாண்டியன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

